Enable Javscript for better performance
அகில இந்திய இந்து மக்கள் கட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய இந்து மக்கள் கட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்

    By DIN  |   Published on : 01st July 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய இந்து மக்கள் கட்சித் தலைவருக்கு செல்லிடப்பேசியில் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீஸில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிருஷ்ணாபுரத்தில் வசிப்பவர் செஞ்சி ராஜா. இவர், அகில இந்திய இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவராக உள்ளார். கடந்த 28-ஆம் தேதி இவரது செல்லிடப்பேசிக்கு 6385410678 என்ற எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை காவல் ஆய்வாளர் கரண் என அறிமுகப்படுத்திக்கொண்டு, திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
    இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செஞ்சி ராஜா புகார் அளித்தார். அதன்பேரில், செல்லிடப்பேசி மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai