Enable Javscript for better performance
அங்கன்வாடி பணியாளர்களுக்கு தொழுநோய் கண்டறியும் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அங்கன்வாடி பணியாளர்களுக்கு தொழுநோய் கண்டறியும் பயிற்சி

    By DIN  |   Published on : 01st July 2018 01:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழுநோய் கண்டறியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
    செய்யாறு சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு சுகாதார துணை இயக்குநர் வி.கோவிந்தன் தலைமை வகித்தார். நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.பழனி முன்னிலை வகித்தார். நலன் கல்வியாளர் எல்லப்பன் வரவேற்றார். இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சி.இளங்கோ கலந்து கொண்டு, தொழுநோயின் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், பரவுதலை தடுக்கும் முறைகள் குறித்து தெரிவித்து பயிற்சி அளித்தார்.
    இந்தப் பயிற்சியில் செய்யாறு ஒன்றியத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் 85 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர்கள் கோபாலகிருஷ்ணன், ராகவன், ஆய்வாளர்கள் ராஜவேலு, ஆனந்தன், சேகர், ஏழுமலை, அசோகன் ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai