Enable Javscript for better performance
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    ஆரணியை அடுத்த பெரியகொழப்பலூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
    பெரியகொழப்பலூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் திருவண்ணாமலை பாபு நினைவு தர்ம அறக்கட்டளை, பெரியகொழப்பலூர் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து மலேரியா எதிர்ப்பு மாத நிகழ்ச்சியையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வார நிகழ்ச்சியையும் நடத்தின.
    நிகழ்ச்சியில் திருவண்ணாமலை பாபு நினைவு தர்ம அறக்கட்டளை நிறுவனர் தலைவர் அ.பாரிவள்ளல் தலைமை வகித்தார். டாக்டர் எஸ்.பவித்ரா முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.அன்பரசன் வரவேற்றார்.
    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெரியகொழப்பலூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் எம்.அருண்குமார், ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியை தொடக்கி வைத்தார். இந்தப் பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
    நிகழ்ச்சியில் அறக்கட்டளை துணைத் தலைவர் பாபு அருணாச்சலம், நடமாடும் மருத்துவக் குழுவைச் சேர்ந்த சத்யா, டாக்டர்கள் பி.நிரஞ்சன், பிரியதர்ஷினி, எம்.அபிராமி, என்.ஆர்.வேதஸ்ரீ, லோ.கனிமொழி, உதவி சித்த மருத்துவ அலுவலர் வே.வித்யபாரதி, உதவி மருத்துவ அலுவலர் இரா.வினிதா, சுகாதார ஆய்வாளர்கள் எம்.புனிதவேலன், டி.முகமதுகவுஸ் மற்றும் மருத்துவக் குழுவினர், மருத்துவப் பணியாளர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai