Enable Javscript for better performance
செங்கத்தில் பயணியர் விடுதியை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாழடைந்த நிலையில் உள்ள பயணியர் விடுதியை சீரமைக்க வேண்டும் என பொதுக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் நெடுஞ்சாலைத் துறையின் பாராமரிப்பில் பயணியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர்கள் அண்ணாதுரை, எம்ஜிஆர், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் தங்கியுள்ளனர்.
    இந்த நிலையில், செங்கம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இந்த விடுதியை சுத்தம் செய்யாமலும், பழுது பார்க்காமலும் அப்படியே விட்டதால், இந்த விடுதி பாழடைந்த நிலையில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி இந்த விடுதியின் முன் சிலர் ஆக்கிரமித்து பல்வேறு கடைகளை நடத்தி வருகின்றனர்.
    எனவே, இந்த விடுதியை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai