Enable Javscript for better performance
தமிழ்ச் சங்கம் சார்பில் முப்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில், முப்பெரும் விழா வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில், கவியரசு கண்ணதாசனின் 92-ஆவது பிறந்த நாள் விழா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் 91-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் கவிதை வாசித்த வந்தவாசி கவிஞர் மு.முருகேஷுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றன.
    விழாவுக்கு சங்கத் தலைவர் அ.மு.உசேன் தலைமை வகித்தார். வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பெ.சுப்ரமணியன், தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சு.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
    திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் கல்வி அலுவலர் வீ.மதி அழகன் சிறப்புரை ஆற்றினார். மேலும், கவிஞர் மு.முருகேஷை சங்க நிர்வாகிகள் பாராட்டி, கௌரவித்தனர்.
    விழாவில், சங்கப் பொருளாளர் எ.தேவா, ஒருங்கிணைப்பாளர் பெ.பார்த்திபன், துணைத் தலைவர் இரா.அருண்குமார், சங்க உறுப்பினர்கள் சீ.கேசவராஜ், கு.சதானந்தன் உள்ளிட்டோர்
    பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai