Enable Javscript for better performance
தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தார் அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் புதிய கட்டடங்களைத் திறந்துவைத்தார் அமைச்சர்

    By DIN  |   Published on : 01st July 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் ரூ.93 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
    இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தெள்ளாறு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஒன்றிய சேவை மையக் கட்டடம், அருங்குணம், ராமசமுத்திரம் ஆகிய கிராமங்களில் கிராம சேவை மையக் கட்டடங்கள், கொரக்கோட்டையில் அங்கன்வாடி மையக் கட்டடம், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், சத்தியவாடியில் சமுதாயக் கூட கட்டடம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன.
    விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் வெ.ஏழுமலை, செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ச.ஹரிஹரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ச.மோகன் வரவேற்றார்.
    தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் அந்தந்த கிராமங்களுக்கு நேரில் சென்று புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
    மேலும், அந்தக் கட்டடங்களின் கல்வெட்டுகளையும் அவர் திறந்து வைத்தார். இதையொட்டி, 18 பயனாளிகளுக்கு பசுமை வீட்டுக்கான உத்தரவுகளையும் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
    விழாவில், அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலர் டி.கே.பி.மணி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சி.சீனிவாசன், ஒன்றியச் செயலர்கள் வி.தங்கராஜ், டி.வி.பச்சையப்பன், முன்னாள் தொகுதிச் செயலர் கே.பாஸ்கர் ரெட்டியார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர் ந.ராஜன்பாபு நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai