Enable Javscript for better performance
நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்ஜூலை 3-இல் கலந்தாய்வு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில்ஜூலை 3-இல் கலந்தாய்வு தொடக்கம்

    By DIN  |   Published on : 01st July 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுப்பாளையம் ஒன்றியம், நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது.
    நாகப்பாடி கிராமத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2018 - 19ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் கல்விச் சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.
    வரும் 3-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 453 முதல் 371 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், பிற்பகல் 1.30 மணிக்கு 370 முதல் 339 வரை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
    வரும் 4-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 338 முதல் 305 வரையிலும், பிற்பகல் 1.30 மணிக்கு 304 முதல் 272 வரையிலும், வரும் 5-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு 271 முதல் 231 வரையிலும், பிற்பகல் 1.30 மணிக்கு 230 முதல் 190 வரையிலும் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளதாக பதிவு அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
    கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கைக்காக விண்ணப்பித்து கடிதம் பெறப்படாத மாணவர்களும் மேலே அவரவர் மதிப்பெண்களுக்குரிய கலந்தாய்வு தேதியில் வந்து கலந்து கொள்ளலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai