Enable Javscript for better performance
மட்டவெட்டில் சிறப்பு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கத்தை அடுத்த மட்டவெட்டு ஊராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    மட்டவெட்டு ஊராட்சியில் கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்தார்.
    முகாமில், இசிஜி, ஸ்கேன், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் 130 பேர் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொண்டனர்.
    நிகழ்ச்சியில் கடலாடி அரசு தலைமை மருத்துவர் மணிகண்டபிரபு, அதிமுக மாவட்ட துணைச் செயலர் துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி மற்றும் மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai