வெம்பாக்கம் ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.70.24 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.

வெம்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.70.24 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த மாங்கால் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ரூ.17 லட்சம் மதிப்பில் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடம், அப்துல்லாபுரம் கிராமத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையக் கட்டடம், மாமண்டூர் கிராமத்தில் தாய் திட்டத்தின் கீழ், ரூ.30 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடல் பயிற்சிக் கூடம், தூசி கிராமத்தில் செய்யாறு சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.14.74 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை என மொத்தம் ரூ.70.24 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 4 புதிய கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் செஞ்சி வெ.ஏழுமலை, செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய கட்டடங்களை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஹரிஹரன், உதவிச் செயற்பொறியாளர் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ப.பரணிதரண், ஏ.கோபாலகிருஷ்ணன், பொறியாளர்கள் வேளாங்கண்ணி, ஆர்.அன்பு, முன்னாள் உள்ளாட்சிப் பிரிதிநிதிகள் டி.பி.துரை, எம்.மகேந்திரன், திருமூலன், என்.ரகு, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com