Enable Javscript for better performance
அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம்- Dinamani

சுடச்சுட

    

    அருணாசலேஸ்வரர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம்

    By DIN  |   Published on : 02nd July 2018 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட திரளான பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    சிவனின் அக்னி ஸ்தலமாக திகழ்கிறது திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
    இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொடர்ந்து, பகல் 12.45 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திரளான பக்தர்கள் பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai