Enable Javscript for better performance
ஆவணியாபுரத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரத்தில் அமைந்துள்ள பாஞ்சாலியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
    இந்த கோயிலில் 3-ஆம் ஆண்டு மகாபாரதச் சொற்பொழிவு, அக்னி வசந்த விழா கடந்த ஜூன் 10-ஆம் தேதி தொடங்யது. 
    அன்று முதல் மகாபாரதச் சொற்பொழிவு நடைபெற்று வந்தது. 
    மேலும், வில்வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசுய யாகம், விராடபருவம், கிருஷ்ணன் தூது, கர்ண மோட்சம் உள்பட பல்வேறு தலைப்புகளில் தெருக்கூத்து நடைபெற்று  வந்தன.
    இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, தீமிதி திருவிழா நடைபெற்றன. 
    இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஆவணியாபுரம், சஞ்சீவிராயபுரம், ஆமனந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai