Enable Javscript for better performance
கூழமந்தல் விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறை அடுத்த கூழமந்தல் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, முக்கனி படையலுடன் விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
    காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அசுவனி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கும், ராகு, கேது மற்றும் சனி பகவான்களும் தனித்தனியே கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களுக்கு நடுவே நடுநாயகமாக ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.
    இந்தக் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, முக்கனி படையல் பூஜை நடைபெற்றது. முன்னதாக, காலையில் நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் 27 நட்சத்திர அதிதேவதைகள், ராகு, கேது, சனீஸ்வர பகவான்களுக்கு நறுமண பொருள்களைக் கொண்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடைபெற்றன.
    தொடர்ந்து, விநாயகர் மற்றும் இதர தேவதைகளுக்கு மா, பலா, வாழை சேர்ந்த முக்கனிகளைக் கொண்டு படையலிடப்பட்டது. தொடர்ந்து, முக்கனி படையல் பக்தர்களுக்கு பிரசாதமாக 
    வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai