Enable Javscript for better performance
சிறுமிக்கு திருமணம்: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் சிறுமியைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமிக்கும், திருவண்ணாமலையை அடுத்த நாச்சானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் பவன்குமாருக்கும் (26) கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
    இந்த நிலையில், சிறுமியைக் கட்டாயப்படுத்தி இந்தத் திருமணம் நடைபெற்றதாகவும், இதற்கு சிறுமியின் தாய் கல்பனா, பவன்குமாரின் தாய் பாஞ்சாலை, உறவினர் சுரேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர் என்றும் சிறுமியின் தந்தை திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து பவன்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கல்பனா, பாஞ்சாலை, சுரேஷ் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai