Enable Javscript for better performance
செண்பகதோப்பு அணையை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    செண்பகதோப்பு அணையை சீரமைக்க  ரூ.34 கோடி ஒதுக்கீடு: எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தகவல்

    By DIN  |   Published on : 02nd July 2018 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரை அடுத்த செண்பகதோப்பு அணையை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் கூறினார்.
    போளூரை அடுத்த செண்பகதோப்பு அணையை கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் சனிக்கிழமை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    செண்பகதோப்பு அணை உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.34 கோடியில் வெள்ளூர், அலியாபாத், எஸ்.வி.நகரம், காமக்கூர் ஆகிய பகுதிகளில் செல்லும் கால்வாய்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டு சீரமைக்கப்படும்.
    மேலும், செண்பகதோப்பு அணைப் பகுதியில் உள்ள முள் மரங்கள் பொதுப்பணித் துறை மூலம் அகற்றப்படும். செண்பகதோப்பு அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    அப்போது, அதிமுக மாவட்ட துணைச் செயலர் துரை, பொதுக்குழு உறுப்பினர்  பொய்யாமொழி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai