Enable Javscript for better performance
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் திடீர் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 02nd July 2018 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை, அத்தியந்தல், கிரிவலப் பாதை, கீழ்பென்னாத்தூர், சோமாசிபாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
    தொடர்ந்து, 30 நிமிடங்களுக்கும் மேலாகப் பெய்த மழையால் அனல் காற்று குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தேங்கியது. இதனால் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
    மின்சாரம் துண்டிப்பு: மழையின்போது, சிறிது நேரம் காற்றும் வீசியது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
    தகவலறிந்த மின் வாரிய ஊழியர்கள் வந்து உயரழுத்த மின் கம்பி மீது விழுந்திருந்த வேப்ப மரக் கிளையை வெட்டி அகற்றினர். இதையடுத்து, மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai