Enable Javscript for better performance
தொழிலதிபர் வீட்டில் 30 பவுன் நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள், ரூ.2.60 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருவண்ணாமலை கோபால் நாயக்கன் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் அபிபூர் ரஹ்மான் (30). இவர், சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார். நள்ளிரவு 12 மணிக்கு அபிபூர் ரஹ்மான் வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 
    30 பவுன் தங்க நகைகள், ரூ.2.60 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை நகர குற்றப் பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீஸார் வந்து விசாரணை மேற்கொண்டனர். கேரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும், போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai