Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் நூதனப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் நூதனப் போராட்டம்

    By DIN  |   Published on : 02nd July 2018 07:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் கைவிடப்படுவதற்காக அங்காளம்மனை வேண்டி, திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்திலுள்ள தொழுப்பேடு கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேத்துப்பட்டு வட்டம், தச்சாம்பாடி ஊராட்சியில் உள்ள தொழுப்பேடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 250-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயத்தையே தொழிலாக செய்து வருகின்றனர்.
    சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை சேத்துப்பட்டு - போளூர் சாலையில் தச்சாம்பாடி அருகே குறுக்கே செல்கிறது. இதனால், தொழுப்பேடு கிரமத்தில் உள்ள விவசாய நிலங்கள், 50 வீடுகள், கிராம தேவையான அங்காளம்மன் கோயில் ஆகியவை அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில், அங்காளம்மன் கோயில் பொதுமக்கள் நிதியுடன் கடந்த ஆண்டுதான் கட்டி முடிக்கப்பட்டது.
    இந்த நிலையில், தங்கள் வாழ்வாதாரம் பறிபோகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், வேதனையடைந்த தொழுப்பேடு கிராம மக்கள், சென்னை - சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டு அங்காளம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை பூஜை செய்து வழிபட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai