சுடச்சுட

  

  பயிர்க் காப்பீட்டுத் திட்டம்:  விவசாயிகளுக்கு அழைப்பு

  By DIN  |   Published on : 02nd July 2018 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கீழ்பென்னாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என்று வட்டார வேளாண் உதவி இயக்குநர் த.ராம்பிரபு தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீழ்பென்னாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் 2018-ஆம் ஆண்டுக்கான பாரதப் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தின்படி, நெல் (சொர்ணவாரி பருவம்), மக்காச்சோளம், நிலக்கடலை, சோளம், கம்பு, எள் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். நெல்லுக்கு ரூ.504, மக்காச் சோளத்துக்கு ரூ.186, கம்பு பயிருக்கு ரூ.180, எள்ளுக்கு ரூ.170 என காப்பீட்டுத் தொகை செலுத்த வேண்டும்.
  நெல் பயிருக்கு வரும் 31-ஆம் தேதிக்குள்ளும், மற்ற பயிர்களுக்கு வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள்ளும் காப்பீட்டுத் தொகையை செலுத்தலாம். நிகழாண்டு சோழமண்டலம் எம்.எஸ். என்ற நிறுவனம் மூலம் பயிர்க் காப்பீடு செய்யப்படுகிறது. காப்பீட்டுத் தொகையை இ - சேவை மையங்கள், வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், பொதுத் துறை வங்கிகள் மூலம் செலுத்தலாம்.
  காப்பீட்டுத் தொகை செலுத்தும்போது, அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர் 
  தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai