Enable Javscript for better performance
பி.சி., எம்.பி.சி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பி.சி., எம்.பி.சி. மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 02nd July 2018 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட (பி.சி.), மிகவும் பிற்படுத்தப்பட்ட (எம்.பி.சி) இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
    அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழில் படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் இருந்து பெற்று பூர்த்தி செய்து வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். தங்களது வங்கிக் கணக்கு எண், ஆதார் எண் விவரங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 2018 செப்டம்பர் 1-ஆம் தேதியில் தொடங்கும் கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை நவம்பர் 30-ஆம் தேதிக்கு முன்பும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
    மேலும், விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும். மேலும், w‌w‌w.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/​b​c‌m​b​c‌d‌e‌p‌t​  என்ற இணையதளத்தில் இருந்தும் கூடுதல் விவரங்கள், விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai