Enable Javscript for better performance
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: மெக்கானிக் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே சனிக்கிழமை இரவு இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மெக்கானிக் உயிரிழந்தார். மூவர் பலத்த காயமடைந்தனர்.
    செய்யாறு வைத்தியர் தெருவைச் சேர்ந்தவர் மதன்குமார் (28). பைக் மெக்கானிக்கான இவர், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள உறவினரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் செய்யாறுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் அவரது நண்பர் கோபால் தெருவைச் சேர்ந்த பிரகாசமும் (22) உடன் வந்துள்ளார்.
    மாங்கால் கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மதன்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதாகத் தெரிகிறது. இதில் மதன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    பலத்த காயமடைந்த பிரகாசம் (22), மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மாங்கால் காலனியைச் சேர்ந்த முத்து (22), புருஷோத்தமன் (17) ஆகியோர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai