Enable Javscript for better performance
லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆரணி லூம்சிட்டி லயன்ஸ், லியோ சங்கத்தின் 2018 - 2019ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    விழாவுக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.சாந்திமணி தலைமை வகித்தார். அரிமா சங்க 2-ஆம் துணை ஆளுநர் கே.அருண்குமார் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் 
    ஆளுநர் கே.பி.குமணன், சேவைத் திட்டங்களை வழங்கினார். இதில், லூம்சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவராக ஈ.இன்பராஜ், செயலராக ஜி.ஏ.ரேணுகா கங்காதரன், பொருளாளராக எ.திவ்யபாரதி, லியோ சங்கத் தலைவராக ஈ.உமேஷ், செயலராக டி.அரவிந்த், பொருளாளராக ஜி.ஜித்தேஸ் உள்ளிட்டோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai