Enable Javscript for better performance
வந்தவாசி ஓம் சிவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி த.கிஷ்டப்ப உடையார் தெருவில் அமைந்துள்ள ஓம் சிவசக்தி விநாயகர் கோயில், பக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    இதையொட்டி, வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்துசாந்தி, பிரவேசபலி உள்ளிட்டவை நடைபெற்றன. இதையடுத்து, சனிக்கிழமை மூலமந்த்ர ஹோமம், பூர்ணாஹுதி, பீட ஸ்தாபனம், யந்த்ர ஸ்தாபனம், கோபுர கலச ஸ்தாபனம் உள்ளிட்டவை நடைபெற்றன.
    தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை ஸகஸ்ரநாம அர்ச்சனை, மஹா பூர்ணாஹுதி, யாத்ராதான ஸங்கல்பம், கும்ப புறப்பாடு உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர், காலை 10 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai