Enable Javscript for better performance
ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்திச் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பக்திச் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 02nd July 2018 02:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பக்திச் சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றன.
    திருவண்ணாமலை - செங்கம் சாலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் அமைந்துள்ளது. இங்கு, பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு ஜெயந்தி விழா 2017 நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, 2018 டிசம்பர் மாதம் வரை நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்த ஏராளமான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    பக்திச் சொற்பொழிவு: மாலை 4 மணி முதல் 6 மணி வரை கேரள மாநிலம், காஞ்சன்காடு பகுதியில் உள்ள ஆனந்தாஸ்ரமம் தலைவர் பூஜ்யஸ்ரீ சுவாமி முக்தாநந்தா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மும்மூர்த்திகள் என்ற தலைப்பில் பப்பா ராமதாஸ், மாதாஜி கிருஷ்ணாபாய், சுவாமி சச்சிதானந்தா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு, சிறப்புகள் குறித்த பக்திச் சொற்பொழிவாற்றினார். தொடர்ந்து, மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை பாபநாசம் ஸ்ரீஅசோக் ரமணி குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    விழா ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் மா தேவகி, ஆர்.விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, ஜி.சுவாமிநாதன், டி.எஸ்.ராமநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன், தன்னார்வலர் ஆர்.எஸ்.இந்திரஜித் மற்றும் தன்னார்வலர்கள், ஆஸ்ரம ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai