Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்களை திருடிய 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கம் அருகே இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிபட்டு கிராமத்தில் வேலூர் - திருவண்ணாமலை சாலையில் காவல் ஆய்வாளர் ராஜகோபால் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் பிரபு மற்றும் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது,  வில்வாரணியைச் சேர்ந்த மோகன் மகன் ராஜா(25), ரங்கநாதன் மகன் சிவலிங்கம் (28), சரவணன் மகன் மணிகண்டன் (20), ஐயப்பன் (20) ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். 
    அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். 
    விசாரணையில், அவர்கள் 4 பேரும் சேர்ந்து கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் 11இரு சக்கர வாகனங்களைத் திருடியதாக ஒப்புக் கொண்டனர். பின்னர், போலீஸார்  11 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து,  4 பேர் மீதும்   வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai