Enable Javscript for better performance
கோயில் திருவிழாவில் தகராறு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே கோயில் திருவிழா இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறு காரணமாக 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
    வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சேர்ந்த பாபு(32) உள்ளிட்டோர் அருகே உள்ள சிங்கப்பள்ளி கிராமத்தில் கோயில் திருவிழாவை ஒட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இசைக் கச்சேரியைப் பார்க்கச் சென்றாராம். 
    அங்கு, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனராம்.
    இந்த நிலையில், பாபு, மணிகண்டன், சுப்பிரமணி உள்ளிட்ட 9 பேர் மீண்டும் சிங்கப்பள்ளி கிராமத்துக்குச் சென்று அங்கு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், வீட்டின் ஜன்னல்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினராம்.
    இதுகுறித்து சிங்கப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முருகன் அளித்த புகாரின் பேரில், பாபு, மணிகண்டன், சுப்பிரமணி உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் பாபு, மணிகண்டன், சுப்பிரமணி ஆகிய 3 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai