Enable Javscript for better performance
திருக்குறள் தொண்டு மையம் சார்பில் திருக்குறள் மலை வலம்- Dinamani

சுடச்சுட

    

    திருக்குறள் தொண்டு மையம் சார்பில் திருக்குறள் மலை வலம்

    By DIN  |   Published on : 03rd July 2018 09:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், 130-ஆவது மாதத் திருக்குறள் மலை வலம் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு மாவட்ட கவிஞர் பேரவைத் தலைவர் நல்ல.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். பொருளாளர் அம்பீ (எ) சுப்பிரமணி முன்னிலை வகித்தார். திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார். தொடர்ந்து, திருக்குறள் தொண்டு மைய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு திருக்குறளை 
    ஓதிக்கொண்டே 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai