Enable Javscript for better performance
தொழிலாளி மீது தாக்குதல்: 6 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 6 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
    வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சூர்யா (20). பெயிண்டராக வேலை செய்து வரும் இவர்,  ஞாயிற்றுக்கிழமை நகல் எடுப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் கீழ்க்கொடுங்காலூர் - மங்கலம் மாமண்டூர் கூட்டுச் சாலைக்குச் சென்றார். 
    அப்போது, அங்கிருந்த மங்கலம் மாமண்டூரைச் சேர்ந்த அசோக் (26) மீது இரு சக்கர வாகனம் உரசியதாம். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    இதையடுத்து, அசோக் மற்றும் அவரது தரப்பினர் சேர்ந்து 
    சூர்யாவைத் தாக்கி கத்தியால் வெட்டினராம். இதனால், காயமடைந்த சூர்யா வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்டம், 
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    இதுகுறித்து சூர்யாவின் தாய் உமா அளித்த புகாரின் பேரில், கீழ்க்கொடுங்காலூர் போலீஸார் மங்கலம் மாமண்டூரைச் சேர்ந்த அசோக், ராஜேஷ், சதீஷ்குமார், ராஜசேகரன், முரளி, விவேக் ஆகிய 
    6 பேரை திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai