சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் பாமக சார்பில் பொதுக் கூட்டம் மற்றும் வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜெ.குருவின் நினைவேந்தல் கூட்டம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
    கூட்டத்துக்கு மாவட்ட பாமக உழவர் பேரிழக்கச் செயலர் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார். பாமக நிர்வாகிகள் எம்.சுப்பிரமணி, கி.பச்சையப்பன், பி.கோவிந்தன், ஆர்.பச்சையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் தொகுதி அமைப்புத் தலைவர் எஸ். ராஜசேகரன் வரவேற்றார்.
    மக்களவை முன்னாள் உறுப்பினர் மு.துரை, முன்னாள் 
    எம்.எல்.ஏ.  கோ.எதிரொலி மணியன், மாநிலத் துணைப் பொதுச் செயலர் இரா.காளிதாஸ், மாவட்டச் செயலர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு பேசினர்.
    கூட்டத்தில் மாவட்ட பாமக முன்னாள் செயலர் பாபு, தொகுதி அமைப்புச் செயலர் பலராமன் உள்படப் பலர் கலந்து 
    கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai