Enable Javscript for better performance
பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: ரூ. 6.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: ரூ. 6.12 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

    By DIN  |   Published on : 03rd July 2018 09:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ. 6.12 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்கள், முதியோர், மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 533 மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
    இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
    நலத்  திட்ட உதவிகள் அளிப்பு:   மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் ரூ. 5,62,340 மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார். மேலும், ஆட்சியர் விருப்ப நிதியில் இருந்து திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி கிராமம், திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய சாந்தியின் மகன் நீலகண்டன், வந்தவாசியை அடுத்த மீசாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகள் லட்சுமி ஆகியோர் சிறுதொழில் தொடங்க தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.
    குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் க.லோகநாயகி, மகளிர் திட்ட இயக்குநர் ப.ஜெயசுதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பொதுமக்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai