Enable Javscript for better performance
மத்திய  பாஜக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய  பாஜக அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

    By DIN  |   Published on : 03rd July 2018 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக சார்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளர் பி.அன்பரசன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் வி.கருணாகரன், மாவட்டப் பொருளாளர் என்.ராமச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். 
    கூட்டத்தில் மாநில பாஜக செயலர் புரட்சிக் கவிதாசன், மாவட்டத் தலைவர் எஸ்.நேரு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு மத்திய அரசின் 4 ஆண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
    கூட்டத்தில், ஆரணி மக்களவைத் தொகுதி பாஜக அமைப்பாளர் பி.பாஸ்கரன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் கே.ஆர்.குமார், மாவட்டப் பொருளாதாரப் பிரிவு துணைத் தலைவர் ஆர்.பிரதீஷ்குமார், திருவண்ணாமலை ஒன்றியத் தலைவர் எஸ்.வெங்கடேசன் உள்பட மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai