Enable Javscript for better performance
மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
    நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். செ.நாச்சிப்பட்டு கூட்டுறவுக் கடன் சங்கச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் அசோகரன், பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    கல்லூரி முதல்வர் பரிமளா ஜெயந்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (ஓய்வு) மதியழகன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. 
    கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாஜலபதி குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு வகுப்பைத் தொடக்கி வைத்தார். ஆன்மிகச் சொற்பொழிவாளர் ம.தஞ்செயன் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் 
    கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai