Enable Javscript for better performance
வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம்: ரயில் மறியலில் ஈடுபட்ட 75 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம்: ரயில் மறியலில் ஈடுபட்ட 75 பேர் கைது

    By DIN  |   Published on : 03rd July 2018 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பி.க.அம்பேத்வளவன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன், மாவட்டச் செயலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    தொடர்ந்து அவர்கள், திருப்பதியில் இருந்து விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயிலை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பெண்கள் உள்பட 75 பேரை போலீஸார் கைது செய்தனர். 
    இவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு, பின்னர மாலையில் 
    விடுவிக்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai