Enable Javscript for better performance
அகில இந்திய கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய கடிதம் எழுதும் போட்டியில் பங்கேற்க அழைப்பு

    By DIN  |   Published on : 04th July 2018 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அகில இந்திய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கோட்ட அஞசல் கண்காணிப்பாளர் எல்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
    இந்திய அஞ்சல் துறை அகில இந்திய அளவிலான கடிதப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. 
    "என் தாய்நாட்டுக்கு ஒரு கடிதம்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான கடிதங்களை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
    18 வயதுக்கு உள்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என 2 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் இன்லாண்டு லெட்டர் பிரிவு, என்வலப் பிரிவு என 2 வகையாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு பெறுவோருக்கு தலா ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசு பெறுவோருக்கு தலா ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறுவோருக்கு தலா 
    ரூ.5 ஆயிரமும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அகில இந்திய அளவிலான போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிப்போருக்கு தலா ரூ.50 ஆயிரமும், இரண்டாமிடம் பிடிப்போருக்கு தலா ரூ.25 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிப்போருக்கு தலா ரூ.10 ஆயிரமும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
    போட்டிகள் குறித்த மேலும் விவரங்களை w‌w‌w.‌t​a‌m‌i‌l‌n​a‌d‌u‌p‌o‌s‌t.‌n‌i​c.‌i‌n​ என்ற தமிழ்நாடு வட்ட அஞ்சல் இணையதளத்தில் காணலாம் என்று திருவண்ணாமலை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் 
    எல்.சந்திரசேகரன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai