Enable Javscript for better performance
ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் அளிப்பு

    By DIN  |   Published on : 04th July 2018 06:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் தாய் - சேய் நலத் திட்டம் சார்பில், தெள்ளாறு வட்டாரத்துக்கு உள்பட்ட 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
    இதற்கான விழா தெள்ளாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு செய்யாறு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் கோவிந்தன் தலைமை வகித்தார். மேலும், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில், ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களிடம் அவர் வழங்கினார்.
    நிகழ்ச்சியில் தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலர் கே.செல்வமுத்துகுமாரசாமி, மருத்துவர் சதீஷ், ஹேண்ட் இன் ஹேண்ட் நிர்வாகிகள் கிருஷ்ணன், பிரின்ஸஸ் பியுலா, ஜெபஸ்டின், மரியவசந்தகுமார், புஷ்பதெரெசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai