Enable Javscript for better performance
ஆரம்ப நிலை பயிற்சி மையம் நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆரம்ப நிலை பயிற்சி மையம் நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 04th July 2018 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இளஞ்சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் நடத்த விரும்பும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புறஉலகு சிந்தனையற்ற இளஞ் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. 
    பயிற்சி மையம் நடத்த விரும்பும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகள் நலன் தொடர்பாக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.
    மாற்றுத் திறனாளர் முழு பங்கேற்புச் சட்டம் 2016 பிரிவு 51(1)-ன் கீழ் பதிவு பெற்ற தொண்டு நிறுவனமாக இருக்க வேண்டும். 
    மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் அரசு அங்கீகாரம் பெற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகவும், தொண்டு நிறுவனம் போதிய இட வசதி கொண்டதாகவும் இருக்க வேண்டும். எனவே, விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 6-ஆம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai