Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செங்கத்தை அடுத்த சுண்டகாய்பாளையம் சத்யம் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்தில் கல்லூரி முதல்வர் முகமத் வரவேற்றார். கல்லூரித் தாளாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி கலந்து கொண்டு, கல்லூரி படிப்பு குறித்தும், கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது குறித்தும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி வாழ்க்கையில் உயருவது குறித்தும் மாணவர்களிடையே விளக்கிப் பேசினார். மேலும், மாணவர்களுக்கு இனிப்பு, பேனா வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். 
    தொடர்ந்து, கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்களும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.  இதில், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai