Enable Javscript for better performance
கிணற்றில் தவறி விழுந்து லாரி ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி அருகே கிணற்றின் சுவர் மீது அமர்ந்திருந்த லாரி ஓட்டுநர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.
    வந்தவாசியை அடுத்த தெள்ளாறு காலனியைச் சேர்ந்த செல்லன் மகன் ராஜி (55). லாரி ஓட்டுநரான இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அந்தப் பகுதியில் உள்ள பொதுக் கிணற்றின் சுவர் மீது அமர்ந்திருந்தாராம். அப்போது, தவறி கிணற்றினுள் விழுந்த ராஜி, நீரில் மூழ்கி உயிரிழந்தார். 
    இதுகுறித்து அவரது மனைவி பூங்காவனம் அளித்த புகாரின்பேரில், தெள்ளாறு போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai