Enable Javscript for better performance
செங்கத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் வேலை நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஊகர வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அலுவலர்கள் பணியில் ஈடுபடாததால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில், கிராம ஊராட்சிச் செயலர்களுக்கு அரசு ஒப்பந்தப்படி பதிவறை எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும், அரசு வீடு கட்டும் திட்டங்களில் பயனாளிகளுக்கு மாற்றாக ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயிப்பதை தவிர்க்க வேண்டும்.
    தனி நபர் கழிப்பிடத் திட்ட மானியத்தை ரூ.15 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 26 
    அம்ச கோரிக்கைகளை  வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் பணியில் ஈடுபடாமல் அலுவலகத்தை பூட்டிவிட்டு, அலுவலகம் முன் அமர்ந்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதனால் செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட 44 கிராம ஊராட்சிகளில் இருந்து பல்வேறு கோரிக்கைகளுக்காக செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்த கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai