Enable Javscript for better performance
செய்யாறில் தனியார் தொழில்சாலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு: இழப்பீடு கோரி முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் தனியார் தொழில்சாலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு: இழப்பீடு கோரி முற்றுகை

    By DIN  |   Published on : 04th July 2018 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு சிப்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் காலணி தயாரிக்கும் தொழில்சாறையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, உறவினர்களும், தொழிலாளர்களும் செவ்வாய்க்கிழமை தொழில்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செய்யாறு வட்டம், அனப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் மகன் ஜெகதீசன் (28). இவர், செய்யாறு சிப்காட் பகுதியில் உள்ள காலணி தயாரிக்கும் தொழில்சாலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார்.
    வழக்கம்போல, திங்கள்கிழமை காலை ஜெகதீசன் வேலைக்குச் சென்ற நிலையில், மாலை 3 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக பெற்றோருக்கு தொழில்சாலை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். ஜெகதீசனின் உடலை தூசி போலீஸார் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே, ஜெகதீசனின் தந்தை ராஜேந்திரன் மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
    தொழிலாளர்கள் 
    முற்றுகை : இந்த நிலையில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த ஜெகதீசனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, அவரது உறவினர்களும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் தொழில்சாலையை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சாலையின் இருபுறமும் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
    தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் மற்றும் தூசி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தொழில்சாலை நிர்வாகத்திடம் பேசி உரிய இழப்பீடுத்தொகையை பெற்றுத் தருவதாக போலீஸார் உறுதி அளித்தனர்.
     இதைத் தொடர்ந்து, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai