Enable Javscript for better performance
மது தீமைகள்: மாணவர்களுக்கு காவல் துறையினர் விழிப்புணர்வு- Dinamani

சுடச்சுட

    

    மது தீமைகள்: மாணவர்களுக்கு காவல் துறையினர் விழிப்புணர்வு

    By DIN  |   Published on : 04th July 2018 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் விளக்கமளித்தனர்.
    கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்றலை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட, திருவண்ணாமலை வட்ட மது விலக்கு அமல் பிரிவு காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு பள்ளி நிர்வாகி டி.எஸ்.சவிதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சி.சிவக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை ஜி.சக்தி வரவேற்றார். 
    திருவண்ணாமலை மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வி.அசோக்குமார், மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ஆர்.கவிதா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மது அருந்துவதால் மனித உடல் நலனுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்.மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பது தொடர்பான தகவல்களை காவல் துறைக்குத் தெரிவிப்பது எப்படி என்பது குறித்தும் அவர்கள் விளக்கினர். இதுதவிர, பள்ளி மாணவ, மாணவிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். 
    பள்ளி மாணவர்கள் தொலைக்காட்சி பார்ப்பதையும், செல்லிடப்பேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுரை வழங்கினர்.
    தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு காவல் துறை அதிகாரிகள் விளக்கமளித்தனர். 
    இதில், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai