Enable Javscript for better performance
விபத்தில் காயமடைந்த காவலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை அருகே விபத்தில் பலத்த காயமடைந்த இரவுக் காவலாளி உயிரிழந்தார்.
    கலசப்பாக்கம், செங்குந்தர் தெருவைச் சேர்ந்தவர் பிச்சாண்டி (60). திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் உள்ள தனியார் இரு சக்கர வாகன உதிரி பாக விற்பனை நிலையத்தில் இரவுக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜூன் 29-ஆம் தேதி இரவு பணி முடிந்து பிச்சாண்டி மொபெட்டில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி கால்நடை மருத்துவமனை அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே நாய் வந்ததாம். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த பிச்சாண்டி பலத்த காயமடைந்தார். இவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
    பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், அங்கு பிச்சாண்டி உயிரிழந்தார். 
    இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai