Enable Javscript for better performance
அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    துரிஞ்சாபுரத்தை அடுத்த ஊசாம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதன்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    இந்தக் கண்காட்சியை வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன் திறந்து வைத்து பேசியதாவது: 2018 - 2019ஆம் கல்வியாண்டில் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 834 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் 31-ஆம் தேதிக்குள் அனைத்து மாணவர்களும் தமிழை சரளமாக வாசிக்கும் வகையில் திறன் மேம்படுத்தப்படும். இதற்காக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். இதைத் தொடர்ந்து, அவர் கண்காட்சியை பார்வையிட்டார்.
    இந்தக் கண்காட்சியில் இயற்கை விவசாயம் பற்றிய செயல்முறை, சந்திராயன் 2 ராக்கெட், மூலிகைச் செடிகள், தானிய வகைகள், கப்பல் கட்டுதல், எளிய முறையில் நீரை சூடுபடுத்துதல் உள்பட பல்வேறு அறிவியல் படைப்புகளை மாணவர்கள் பார்வைக்கு வைத்திருந்தனர். இதில், பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எஸ்.வெங்கடாசலம், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் உஷா, ஆசிரியர்கள் கௌவுசல்யா, ஹேமலதா, வசந்தி, அருணகிரி, ஜெயகௌவுரி, கணினி ஆபரேட்டர்
    தினகரன் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai