Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற அலுவலர் சங்க வந்தவாசி வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் வந்தவாசியில்
    செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு சங்க கிளைத் தலைவர் இராச.வேணுகோபால் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் வரதன் வரவேற்றார். செயலர் கே.கன்னியப்பன் செயலர் அறிக்கை வாசித்தார். பொருளாளர் எஸ்.நடராசன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
    கூட்டத்தில், வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ள மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் எம்.முனுசாமி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai