Enable Javscript for better performance
கல்லூரி மாணவியிடம் தகராறு :ராணுவ வீரர் உள்பட 6 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கல்லூரி மாணவியிடம் தகராறு :ராணுவ வீரர் உள்பட 6 பேர் மீது வழக்கு

    By DIN  |   Published on : 05th July 2018 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாட்டறம்பாள்ளி அருகே கல்லூரி மாணவியிடம் ராணுவ வீரர் கலாட்டா செய்தது தொடர்பாக
    ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் சிவாங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன் (24). இவர், உத்தரப் பிரதேசம் மாநிலம், மீரட் பகுதியில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 20 ஆம் தேதி விடுமுறையில் ஊருக்கு வந்த மேகநாதன், கடந்த சில நாள்களாக சிவாங்குட்டை பகுதியைச் சேர்ந்த சங்கரின் மகள் ஐஸ்வரியாவை (19) கல்லூரிக்குச் சென்று வரும்போது தினமும் கலாட்டா செய்துவந்தாராம்.
    இதையறிந்த மாணவியின் பெற்றோர் ராணுவ வீரர் மேகநாதனைக் கண்டித்துள்ளனர்.
    இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மாணவியின் வீட்டுக்கு சென்று மேகநாதன் அவரை மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு வெலகல்நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே சங்கருக்குச் சொந்தமான கடைக்கு மேகநாதன் உள்ளிட்ட சிலர் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
    அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் சங்கர், அவரது மனைவி சித்ரா, ராணுவ வீரர் மேகநாதன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    இதுதொடர்பாக இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸார் மேகநாதன், உமாபதி, முத்துசாமி, சங்கர், சித்ரா
    உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai