Enable Javscript for better performance
செய்யாறு அரசுக் கல்லூரியில்முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அரசுக் கல்லூரியில்முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 05th July 2018 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப் பிரிவுகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி நிர்வாகம் தெவித்தது.
    இதுகுறித்து கல்லூரி முதல்வர் க.எழிலன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2018 - 19ஆம் கல்வியாண்டில் தமிழ், பொருளியல்,
    ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் புதன்கிழமை (ஜூலை 4) முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
    ஒரு விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.60 ஆகும். எஸ்சிஏ, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் சான்றொப்பமிட்ட சாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பித்து பதிவுக் கட்டணம் ரூ.2 செலுத்தி,
    விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்
    வரும் 19-ஆம் தேதியாகும். பாடப் பிரிவுகளுக்கான மாணவர்
    சேர்க்கை கலந்தாய்வு வரும் 30-ஆம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai