Enable Javscript for better performance
ஜூலை 10-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜூலை 10-இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 05th July 2018 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் குறைகள், இன்னல்களை அவ்வப்போது கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில், மாவட்ட அளவிலான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜூலை மாதத்துக்கான குறைதீர் கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) காலை 11 மணிக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெறுகிறது.
    இந்தக் கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் மட்டும் கலந்து கொண்டு தங்களது குறைகளை விண்ணப்பங்களாக அளித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai