Enable Javscript for better performance
நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுக்காகதண்ணீரில் மிதந்து மாணவர் சாதனை முயற்சி!- Dinamani

சுடச்சுட

    

    நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுக்காகதண்ணீரில் மிதந்து மாணவர் சாதனை முயற்சி!

    By DIN  |   Published on : 05th July 2018 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலையில் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வுக்காக பள்ளி மாணவர், 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
    இந்திய அரசின் நேரு யுவகேந்திரா, அரியானா அறக்கட்டளை, திருவண்ணாமலை சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேடிங் கழகம் இணைந்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுக்கான உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியை புதன்கிழமை நடத்தின.
    திருவண்ணாமலை - வேட்டவலம் சாலையில் உள்ள நீச்சல் குளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஏ.இங்கர்சால் தலைமை வகித்தார். யோகாப் பயிற்சியாளர் ஜி.ராஜராஜேஸ்வரி வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், தெற்கு மாவட்ட அதிமுக செயலர் பெருமாள் நகர் கே.ராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்கள், சிறந்த மாணவர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கினர்.
    தொடர்ந்து, 12 வயதுள்ள தனியார் பள்ளி மாணவர் ஜி.சிவகுரு (12) தொடர்ந்து 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து யோகாசனம் மூலம் உலக சாதனை முயற்சியில் ஈடுபடும் நிகழ்ச்சியை சிறப்பு அழைப்பாளர்கள் தொடக்கி வைத்தனர். இதையடுத்து, ஜி.சிவகுரு 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
    நிகழ்ச்சியில், சோனாசலம் அடிகளார், பிரம்மா குமாரிகள் அமைப்பின் இயக்குநர் உமா, அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஏ.ஆர்.பாலமுருகன், யோகா மற்றும் சிலம்பப் பயிற்சியாளர் கல்பனா, அரியானா அறக்கட்டளை ஹெச்.கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai