Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலைத் திட்டம் பெரணமல்லூரில் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலைத் திட்டம் பெரணமல்லூரில் நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு

    By DIN  |   Published on : 05th July 2018 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பசுமை வழிச் சாலைத் திட்டத்துக்காக திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்தார்.
    சென்னை - சேலம் இடையிலான 8 வழி பசுமைச் சாலைக்காக பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த விளாநல்லூர், நம்பேடு, அரியபாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
    அரியபாடி பகுதியில் அதிகாரிகள் நிலத்தை அளந்துகொண்டிருந்தபோது, அந்தப் பகுதி விவசாயிகள் கூட்டாக சேர்ந்து இங்கு நிலத்தை அளக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
    அப்போது, சரஸ்வதி என்ற பெண்மணி அதிகாரிகள் நிலத்தை அளவிட வைத்திருந்த கருவியை பிடுங்கிக்கொண்டு அளவிட விடாமல் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், விவசாயி ஜீவதாஸ், தனது நிலத்தில் அளந்து நட்டு வைக்கப்பட்டிருந்த கற்களை பிடுங்கி எறிந்தார்.
    இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது, செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான போலீஸார் விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.
    இதைத் தொடர்ந்து, சேத்துப்பட்டு ஒன்றியப் பகுதியில் உலகம்பட்டு, செம்மாம்பாடி, கொரகளவாடி உள்ளிட்ட இடங்களில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது, எதிர்ப்புகள் குறைவாக இருந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai