Enable Javscript for better performance
பசுமை வழிச் சாலை நன்மைகளை விளக்கிடும் வகையில் திருவண்ணாமலையில் ஜூலை 7-இல் அதிமுக சார்பில் பொதுக்கூட்- Dinamani

சுடச்சுட

    

    பசுமை வழிச் சாலை நன்மைகளை விளக்கிடும் வகையில் திருவண்ணாமலையில் ஜூலை 7-இல் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

    By DIN  |   Published on : 05th July 2018 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பசுமை வழிச் சாலையின் நன்மைகளை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில், திருவண்ணாமலையில் அதிமுக சார்பில், வரும் சனிக்கிழமை (ஜூலை 7) பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர்கள் ஆர்.பி.
    உதயகுமார், சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
    சென்னை - சேலம் இடையே அமையவுள்ள 8 வழி பசுமை விரைவுச் சாலை குறித்த எதிர்க் கட்சியினரின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையிலும், இந்தச் சாலை அமைந்தால் ஏற்படக்கூடிய நன்மைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையிலும் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளதாக
    அதிமுக தெரிவித்துள்ளது.
    திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் வரும் 7-ஆம் தேதி மாலை 6 மணியளவில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகிக்கிறார். மாவட்டச் செயலர்கள் பெருமாள்நகர் ராஜன் (தெற்கு), தூசி கே.மோகன் எம்எல்ஏ (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், வருவாய்த் துறை அமைச்சரும், மாநில மாணவரணிச் செயலருமான ஆர்.பி.
    உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கழக அமைப்புச் செயலரும், வடக்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலருமான அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் செய்து
    வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai