Enable Javscript for better performance
பள்ளியில் மாணவத் தலைவர்கள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    செங்கம் திருவள்ளுவர் நகரில் உள்ள சிகரம் பன்னாட்டுப் பள்ளியில் மாணவ தலைவர்கள் தேர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜாஸ்மின் தலைமை வகித்தார். மாணவி மஹிதா வரவேற்றார். கார்த்தியாயினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி, மாணவ தலைவர்களை தேர்ந்தெடுத்து, துறைவாரியாக பட்டையம் அணிவித்து பேசினார். மேலும், மாவட்டத்தில் சிறந்த பள்ளியாக சிகரம் பன்னாட்டுப் பள்ளி விளங்க ஆசிரியர்கள் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
    தொடர்ந்து, நிர்வாக இயக்குநர் இலக்கியா மாணவர்களைப் பாராட்டிப் பேசினார். பின்னர், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai